• Home /
  • Latest News /
  • 16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா '

16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா ' | Tamil Movie News | Cinema Profile

 16 புதுமுகங்கள் அறிமுகமாகும்  'சிவ சிவா ' |  Tamil Movie News | Cinema Profile
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா ' படப்பிடிப்பு இன்று தொடங்கியது .

முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் உருவாகிற படம் 'சிவ சிவா' . இப்படத்தை ரமா இயக்குகிறார். சினிமாவை வெறும் வணிக ஊடகமாகக் கருதாமல் நல்லவை செய்யும் கருவியாக எண்ணிக் களத்துக்கு வரும் இவர் , கதையோடு சிந்தனையைத் தூண்டும் அம்சங்களும் இணைந்த படைப்பாக 'சிவ சிவா'வை உருவாக்கவுள்ளார். சினிமாவுக்குத் தேவையான காதல் , நட்பு ,நகைச்சுவை ஆகிய மசாலா மணத்துடன் சிந்தனைக் தூவல்களைக் கலந்து உருவாகவுள்ளது சிவ சிவா .

படத்துக்கு ஒளிப்பதிவு ஹரிகாந்த் , வசனம் 'வீடியோ ஜாக்கி 'மொக்க மகி . இப்படத்தை எஸ்.ஆர். ஜி ரிதம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஆர். குணா தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று ஐயப்பன் தாங்கலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு ) தலைவர் ஜாக்குவார் தங்கம் , இயக்குநர் 'ராட்டினம்' கே.எஸ். தங்கசாமி , நடிகர் சந்தோஷ் பிரதாப் , நடிகை எலிசபெத் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
Want To Share your Friends?? Just 5 Seconds To Share..!!

Write & Share about " 16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா ' | Tamil Movie News | Cinema Profile" !

1261
Fans
9950
Followers
10
Subscribers

LATEST NEWS

LATEST REVIEWS